உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஸ்துாரி அரங்கநாதர் கோவில் தேரோட்ட விழா

கஸ்துாரி அரங்கநாதர் கோவில் தேரோட்ட விழா

ஈரோடு, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில், நடப்பாண்டு புரட்டாசி தேர்த்திருவிழா கடந்த மாதம், 26ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக காலை, 6:௦௦ மணிக்கு யாகசாலை பூஜை, திருமஞ்சனத்தை தொடர்ந்து, 7.45 மணிக்கு பெருமாள் திருத்தேர் எழுந்தருளினார். சரியாக, 9:14 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் 'கோவிந்தா' கோஷம் முழங்க தேரை இழுத்து சென்றனர். ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு, பன்னீர்செல்வம் பார்க் வழியாக மாரியம்மன் கோவில் அருகில் தரிசனத்துக்காக நிறுத்தப்பட்டது. மாலையில் மீண்டும் இழுக்கப்பட்டு காமராஜ் வீதி வழியாக கோவிலில் நிலை சேர்ந்தது. இன்று அதிகாலை, 4:30 மணிக்கு யாகசாலை பூஜை, திருமஞ்சனம், மாலையில் குதிரை வாகனம் புறப்பாடு நடக்கிறது. நாளை மாலை தெப்பக்குளத்தில் சேஷ வாகன புறப்பாடு, 6ம் தேதி தீர்த்தவாரி, ஆஞ்சநேயருக்கு வடமாலை சாற்றுதலுடன் திருவிழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை