உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நிறைவுக்கு வந்த கேதார கவுரி விரதம்

நிறைவுக்கு வந்த கேதார கவுரி விரதம்

ஈரோடு:கணவன்-மனைவி ஒற்றுமை மற்றும் குடும்ப அமைதிக்காக, கேதார கவுரி விரதம் அனுசரிக்கப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் அஷ்டமி திதியில் தொடங்கும் இந்த விரதம், ஐப்பசி மாத அமாவாசை நாளில் முடிகிறது. அதாவது தொடர்ந்து, 21 நாட்கள் இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் ஐப்பசி மாத அமாவாசை நாளில் நிறைவு பெறுகிறது. இந்நிலையில் கேதார கவுரி விரத நிறைவு தினத்தையொட்டி, அதற்கான பூஜை பொருட்கள் விற்பனை ஈரோட்டில் நேற்று அமோகமாக நடந்தது. முறம், மாங்கல்ய கயிறு, வளையல், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பொருட்களை, பெண்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். குறிப்பாக ஈரோடு ஆர்.கே.வி.சாலையில், கேதார கவுரி நோன்பு நிறைவுக்கு உரிய பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில், விற்பனை களை கட்டியது.புது கணக்கு தொடங்கியவட மாநில வியாபாரிகள்வட மாநிலத்தவர்கள் தீபாவளியன்று மகாலட்சுமிக்கு பூஜை போட்டு புது கணக்கு துவங்குவது வழக்கம். தீபாவளி தினமான நேற்று மாநகரில் வசிக்கும் வட மாநிலத்தவர்கள், தங்கள் கடைகளை பூக்களால் அலங்காரம் செய்து வாழை கன்று, கரும்புகளை தோரணமாக்கி பூஜை போட்டு புது கணக்கை துவங்கினர். இதனால் வாழைக்கன்று, கரும்பு, மாவிலை, சாமந்தி பூ விற்பனை களை கட்டியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ