கீரிப்பள்ளம் ஓடை துார்வாரும் பணி துவக்கம்
கோபி:கோபி டவுன் மத்தியில் செல்லும், கீரிப்பள்ள ஓடையில், ஆறு கி.மீ., தொலைவுக்கு, தனியார் பங்களிப்புடன் துார்வாரும் பணியை, வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று துவக்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: கீரிப்பள்ளம் ஓடை துார்வாரும் பணி துவங்கியுள்ளது. இப்போது தான் த.வெ.க., ஆட்சிக்கு வந்துள்ளதால், கீரிப்பள்ள ஓடைக்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். இதற்கு முன், 5.20 கோடி ரூபாயில், கீரிப்பள்ள ஓடையில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி முதற்கட்டமாக துவங்கப்பட்டது. அப்பணிகள் இனி தொடர நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நகராட்சி நிர்வாகம் அதற்கான ஒத்துழைப்பை தரும். இவ்வாறு கூறினார். கோபி நகராட்சி சேர்மன் நாகராஜ், கமிஷனர் மங்கையர்கரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.