உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கால்நடைகளை திருடிய கேரள களவாணி கைது

கால்நடைகளை திருடிய கேரள களவாணி கைது

பவானி:அம்மாபேட்டை அருகே கால்நடைகளை திருடிய களவாணியை போலீசார் கைது செய்தனர்.அம்மாபேட்டையை அடுத்த ஊமாரெட்டியூர், சுந்தராம்பாளையம் பகுதிகளில், மூன்று மாதங்களுக்கு முன், பல லட்சம் மதிப்புள்ள எருமை, மாடுகள் திருட்டு போயின. இதுகுறித்த புகாரின்படி அம்மாபேட்டை போலீசார், களாவணியை தேடி வந்தனர். இந்நிலையில் கால்நடைகளை திருடிய களவாணியை, கோவையில் நேற்று பிடித்தனர். கைது செய்து அம்மாமபேட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விசாரித்தனர். இதில் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் குழிப்பள்ளியை சேர்ந்த அலி கோயா, 50, என்பது தெரிந்தது. அலிகோயா மட்டுமின்றி இந்த திருட்டில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என தெரிகிறது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !