உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈரோடுக்கு வரத்தாகியுள்ள கேரள அன்னாசி பழங்கள்

ஈரோடுக்கு வரத்தாகியுள்ள கேரள அன்னாசி பழங்கள்

ஈரோடு, ஈரோடுக்கு, கேரளா வில் இருந்து அன்னாசி பழங்களின் வரத்து அதிகரித்துள்ளது.மார்க்கெட்டுகள், தள்ளுவண்டிகளில் அன்னாசி பழங்கள் விற்பனை சூடு பிடித்துள்ளது. ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி சந்தைக்கு, நேற்று 5 டன் அன்னாசி பழங்கள் வரத்தானது. ஒரு பழம் குறைந்தபட்சமாக, 25 ரூபாய் முதல் விற்பனை செய்யப்படுகிறது.இதுகுறித்து அன்னாசி பழ வியாபாரிகள் கூறியதாவது: கேரள மாநிலத்தில் அன்னாசி பழங்களின் விளைச்சல் அதிகரித்துள்ளதால், ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து விலையும் சரிவடைந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 40 முதல் 50 ரூபாய் வரை விற்கப்பட்ட அன்னாசி பழம், தற்போது, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் அன்னாசி பழத்தை அதிகமாக வாங்கி செல்கின்றனர்.இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி