வக்கீல் கொலையில் முக்கிய நபர் கைது
தாராபுரம், தாராபுரத்தில் உயர்நீதிமன்ற வக்கீல் படுகொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பள்ளி தாளாளர் மகனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.தாராபுரத்தில் கடந்த ஜூலை, 28ம் தேதி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம், 41, பட்டப்பகலில் கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பள்ளி தாளாளர் தண்டபாணி உள்பட, 17 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். முக்கிய நபராக தேடப்பட்டு வந்த, தண்டபாணியின் மகன் கார்த்திகேயன், ௩௨, இந்தோனேசியாவில் இருந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி வந்தார். அவரை போலீசார் கைது செய்து, தாராபுரம் மாஜிதிஸ்திரேட் உமா மகேஸ்வரி முன் நேற்று ஆஜர்ப்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.