உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கேழ்வரகு கொள்முதல் நிலையம் ஜன., ௨ம் தேதி முதல் திறப்பு

கேழ்வரகு கொள்முதல் நிலையம் ஜன., ௨ம் தேதி முதல் திறப்பு

ஈரோடு: தாளவாடி, பர்கூர் மலை கிராமங்களில், கேழ்வரகு பயிர் அதிக-மாக சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் அரசு சார்பில் நேரடி கொள்முதல் திறக்க, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்படி கடந்தாண்டு முதல் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. தற்போது இப்பகுதிகளில் கேழ்வரகு அறுவடை தொடங்கியுள்-ளது. இதனால் இந்த ஆண்டும் பர்கூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகம், தாளவாடியில் வேளாண் விற்பனை குழு கிடங்கு வளாகம் என இரு இடங்களில், வரும் ஜன., ௨ம் தேதி முதல் கொள்முதல் நிலையம் திறக்கப்படவுள்ளது. இங்கு குறைந்தபட்ச ஆதார விலையாக குவிண்டாலுக்கு, ௪,௨௯௦ ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்படி விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும் என்று, ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் தமிழ்செல்வி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை