உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடி எஸ்.ஐ.,யை பந்தாடிய பெண்ணாசை

கொடுமுடி எஸ்.ஐ.,யை பந்தாடிய பெண்ணாசை

ஈரோடு: கொடுமுடி போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ.,யாக பணியாற்றியவர் தயாளன். மனு கொடுக்க வந்த பெண்ணிடம், தவறான செயலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதற்கான வீடியோ ஆதாரங்களும் எஸ்.பி.,க்கு சென்றதால், ஊட்டிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். ஏற்கனவே கருங்கல்பாளையம் ஸ்டேஷனில் பணியாற்றியபோது, பெண் சகவாசத்தால் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு, கொடுமுடிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தொடர்ந்த பெண் பித்தால், இடமாற்றத்துக்கு ஆளாகியுள்ளார்.கடத்துார் ஸ்டேஷன் கான்ஸ்டபிள் செல்லதுரை, மது விவகாரத்தில் பணம் வாங்கியதால், ஈரோடு ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். சில தினங்களுக்கு முன் ஈரோடு டவுன் எஸ்.எஸ்.ஐ., சுந்தர்ராஜன், பணி நேரத்தில் மதுபோதையில் சாலையில் படுத்திருந்ததால், ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர்கள் மீது துறை ரீதியான விசாரணை நடத்தி, உரிய தண்டனை வழங்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி