கொங்கு கலை கல்லுாரி 31வது ஆண்டு விழா
ஈரோடு: ஈரோடு நஞ்சனாபுரம், கொங்கு கலை அறிவியல் கல்லுாரியின், 31வது ஆண்டு விழா நடந்தது. பெருந்துறை கொங்கு வேளாளர் தொழில் நுட்பக்கல்லுாரி அறக்கட்டளை தலைவர் குமாரசுவாமி தலைமை வகித்து பேசினாார். கல்லுாரி முதல்வர் வாசுதேவன் ஆண்டறிக்கை வாசித்தார். கல்லுாரி தாளாளர் தங்கவேல், கொங்கு பொறியியல் கல்லுாரி தாளாளர் இளங்கோ, கொங்கு மெட்ரிக் பள்ளி தாளாளர் தேவராஜா, அறக்கட்டளை பாரம்பரிய பாதுகாவலர் சச்சிதானந்தன் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக கோவை ரூட்ஸ் அமைப்பின் நிர்வாக இயக்குனர் சிந்தனை கவிஞர் கவிதாசன் சிறப்புரை நிகழ்த்தினார். பல்வேறு துறைகளில் நுால் வெளியிட்ட ஆசிரியர்கள், சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்கள், சிறந்த மாணவர்களுக்கு விருதும் வழங்கப்பட்டது. விழா ஒருங்கிணைப்பாளர் குமரகுரு வரவேற்றார்.