உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கும்பாபிஷேக- கூட்ட நெரிசலால் அவதி

கும்பாபிஷேக- கூட்ட நெரிசலால் அவதி

சத்தியமங்கலம் :சத்தியமங்கலத்தில் பவானீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று காலை நடந்தது. இதில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதனால் சாலையில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது. ஹிந்து சமய அறநிலையத்துறையினர் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததே போக்கு வரத்து நெரிசலுக்கு காரணம் என பொதுமக்கள், பக்தர்கள் குற்றம் சாட்டினர். வாகனங்களை திப்பு சுல்தான் சாலை வழியாக திருப்பி விட்டும் பஸ்களில் கூட்டம் அலை மோதியது. இதனால் மணிக்கூண்டு, வடக்குபேட்டை, பழைய தபால் ஆபீஸ் ரோடு பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்து, பெண்கள், குழந்தைகள், வயதானோர் சிரமத்துக்கு ஆளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ