வெற்றி வினாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா
குளித்தலை, குளித்தலை அடுத்த, கே.பேட்டையில் வெற்றி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள், விழாக்குழுவினர் முடிவு செய்தனர்.இதன்படி நேற்று முன்தினம், திம்மாச்சிபுரம் காவிரி ஆற்றிலிருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டது. புனிதநீர் அடங்கிய கும்பத்தை, சிவாச்சாரியார்கள் யாகவேள்வி சாலையில் வைத்து கணபதி பூஜை, விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜை செய்தனர்.நேற்று காலை இரண்டாம் கால யாகவேள்வி பூஜை நிறைவடைந்ததும், சிவாச்சாரியார்கள் புனித நீர் கும்பத்தை மங்கள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் வேத மந்திரங்கள் முழங்க கலசத்திற்கு புனித நீர் ஊற்றினர். கலசத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின்னர், மூலவருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபி ேஷகம் செய்தனர். திரளானோர் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.