உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேசிய வில்வித்தை போட்டிக்கு குமுதா பள்ளி மாணவன் தேர்வு

தேசிய வில்வித்தை போட்டிக்கு குமுதா பள்ளி மாணவன் தேர்வு

ஈரோடு, இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும், தேசிய அளவிலான வில்வித்தை தேர்வு போட்டி சென்னையில் நடந்தது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இதில் நம்பியூர் குமுதா பள்ளி பிளஸ் ௧ மாணவன் செல்வ ரித்தீஷ், 17 வயது தனி நபர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். இதன் மூலம் குழு போட்டி, கலப்பு பிரிவு என மூன்று பிரிவுகளுக்கு, தமிழக அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அடுத்த மாதம் நடக்கும் தேசிய அளவிலான போட்டியில் தமிழக அணி சார்பில் பங்கேற்பார்.தேசிய போட்டிக்கு தேர்வு பெற்ற மாணவனை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம் பாராட்டி பரிசு வழங்கினார். துணை தாளாளர் சுகந்தி, பள்ளி செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, பள்ளி முதல்வர் மஞ்சுளா, உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர்கள் பாராட்டினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை