சிறுமியை கர்ப்பமாக்கிய கூலி தொழிலாளி கைது
தாராபுரம்: தாராபுரம் அடுத்த தளவாய்பட்டணத்தை சேர்ந்த, 14 வயது சிறுமி, ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு மாமா முறை உறவினரான மடத்துக்குளம் பகுதியை சேர்ந்த மணி-கண்டன், 24, சில மாதங்களாக சிறுமியிடம் நெருங்கி பழகி-யுள்ளார்.இந்நிலையில் சிறுமியின் உடலில் மாற்றங்கள் தெரியவே, தாரா-புரம் அரசு மருத்துவமனைக்கு, சிறுமியை அழைத்து சென்று பரி-சோதனை செய்தனர்.இதில் சிறுமி மூன்று மாத கர்ப்பம் என தெரிந்தது. சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, தாராபுரம் அனைத்து மகளிர் போலீசார், மணிகண்டனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.