உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாக்கடையில் விழுந்த கூலி தொழிலாளி பலி

சாக்கடையில் விழுந்த கூலி தொழிலாளி பலி

சென்னிமலை:சென்னிமலை அருகே அம்மாபாளையம், காந்திஜி வீதியை சேர்ந்தவர் பூவேந்திரன், 53; கூலி தொழிலாளி. திருமணம் ஆகாத நிலையில் தாய் சரஸ்வதியுடன் வசித்து வந்தார். பூவேந்திரனுக்கு அதீத குடிப்பழக்கம் இருந்தது. பூவேந்திரன் அதிக போதையில் அரச்சலுார் ரோடு, மயானம் அருகில் உள்ள ரோட்டோர பாலத்தின் மீது நேற்று முன்தினம் இரவு படுத்து உறங்கியுள்ளார். அப்போது பாலத்தில் இருந்து தவறி சாக்கடைக்குள் விழுந்துள்ளார். தலைகுப்புற விழுந்ததில் மூச்சுத்திணறி பலியானார். சாக்கடையில் பூவேந்திரன் சடலமாக நேற்று கிடப்பதை கண்ட பொதுமக்கள், சென்னிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அவர் உடலை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை