உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில் தொழிலாளி பலி

விபத்தில் தொழிலாளி பலி

பவானி:அத்தாணி காலனியை சேர்ந்தவர் சக்திவேல், 41. இவர் கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, அத்தாணியில் மளிகை பொருட்களை வாங்குவதற்காக, பவானி -- அத்தாணி சாலையில், நடந்து சென்று சாலையை கடந்தார். அப்போது வந்த- ஐ10 கார் இவர் மீது மோதியது. படுகாயமடைந்த அவரை மீட்டு, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே சக்திவேல் இறந்து விட்டதாக தெரிவித்தனர். ஆப்பக்கூடல் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை