உள்ளூர் செய்திகள்

இளம்பெண் மாயம்

ஈரோடு: ஈரோடு சேனாபதிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராமலிங்கம் மகள் தீபா, 19; ஈரோட்டில் டச் கிளாஸ் அண்ட் இன்டஸ்ரியல் ஷாப்பில் வேலை செய்தார். கடந்த, 30ம் தேதி வேலைக்கு சென்றார். மதியம் குழம்பு வாங்க வெளியே சென்றவர் கடைக்கு திரும்பவில்லை. ராமலிங்கம் புகாரின்படி தாலுகா போலீசார் தேடி வருகின்றனர்.* பவானி அருகே காலிங்கராயன்பாளையத்தை சேர்ந்தவர் புஷ்பா, 67; தனியார் பள்ளி உதவியாளர். இவரது கணவர் சண்முகம், 72; சில தினங்களுக்கு முன் தம்பதி இடையே ஏற்பட்ட தகராறில் சண்முகம் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். புஷ்பா புகாரின்படி சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி