மேலும் செய்திகள்
மண் சரிவை அகற்றிய பேரிடர் மீட்பு குழுவினர்
22-Oct-2025
சத்தியமங்கலம், கடம்பூர் மலைப்பகுதியில் நேற்று மீண்டும் மண் சரிவு ஏற்பட்டது.-ஈரோடு மாவட்டம், கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த மூன்று நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த, 20ம் தேதி கடம்பூர் செல்லும் வழியில், 10க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்பு சாலையை சீரமைப்பு செய்தனர். இந்நிலையில் நேற்று காலை முதல், மதியம் வரை மழை தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்தது.நேற்று மாலை கடம்பூர் செல்லும் வழியில், இடுக்கு பாறைக்கு அருகில் மண் சரிந்து, சாலையோரம் இருந்த ராட்சத பாறைகள் உருண்டு சாலையின் குறுக்கே விழுந்தது. தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள், பொக்லைன் மூலம் இரண்டு மணி நேரம் போராடி சாலை குறுக்கே கிடந்த பாறையை அகற்றினர். இதனால், கடம்பூர் மலைப்பாதையில், 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
22-Oct-2025