மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் நிகழ்ச்சி
ஈரோடு: ஈரோடு மாவட்ட தி.மு.க., அலுவலகம் மற்றும் வீட்டு வசதித்-துறை அமைச்சர் முத்துசாமி முகாம் அலுவலகத்தில், மொழிப்போர் தியாகிகளின் வீர வணக்க நாள் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மாலை அணி-வித்து, மலர் துாவி அமைச்சர் மரியாதை செலுத்தினார். இதில் எம்.பி., அந்தியூர் செல்வராஜ், வடக்கு மாவட்ட செயலாளர் நல்-லசிவம், நிர்வாகிகள் சச்சிதானந்தம், செல்லபொன்னி, சாமி, வீர-மணி உட்பட பலர் பங்கேற்றனர்.