மேலும் செய்திகள்
பண்ணாரி கோவிலில் ரூ.1.13 கோடி காணிக்கை
28-May-2025
சத்தியமங்கலம், சத்தியமங்கலம் அருகே கே.என்.பாளையம் டேம்ரோடு, கொருமடுவு பாலதண்டாயுதபாணி கோவிலில், 29வது ஆண்டு விழா மற்றும் திருமணத்தடை நீக்கும் சுயம்வரா யாகம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற திருமணம் ஆகாத ஆண், பெண்கள், நவக்கிரக ஆலயத்தை சுற்றி, நவதானியங்களை தலையை சுற்றி யாக குண்டத்தில் போட்டனர். ஆண்கள் வாழை மரத்துக்கும், பெண்கள் பாலை மரத்துக்கும் மாலை அணிவித்து மாங்கல்ய தோஷத்தை நீக்க பரிகாரம் செய்து கொண்டனர்.இதை தொடர்ந்து கருந்துளசி, தொட்டாச்சிணுங்கி மூலிகை செடிகளுக்கு, குங்குமம் - மஞ்சள் வைத்து வணங்கி ராகு - கேது தோஷம், சனிதோஷம், நவக்கிரக தோஷம், மாங்கல்ய தோஷம் உள்ளிட்ட தோஷங்கள் நீங்க சிறப்பு வழிபாடு நடந்தது. மதியம் மகா பூர்ணாகுதியை தொடர்ந்து, பார்வதி-பரமேஸ்வரனுக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.இந்நிகழ்வில் ஈரோடு மட்டுமின்றி நாமக்கல், திருச்சி, கரூர், மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதி இளைஞர், இளைஞிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை பழனிச்சாமி தலைமையில் கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் பங்களாபுதுார் போலீசார் ஈடுபட்டனர்.
28-May-2025