மேலும் செய்திகள்
கொடுமுடி எஸ்.ஐ.,யை 'பந்தாடிய' பெண்ணாசை
22-Sep-2024
ஈரோடு: பாலியல் தொல்லை புகாரில், மெத்தனமாக செயல்பட்ட இன்ஸ்பெக்டர், இடமாற்றம் செய்யப்பட்டார். விழுப்புரம், வாட்டர் டேங்க் வீதியை சேர்ந்தவர் இளந்தமிழன், 26; தனியார் கம்பெனி ஊழியர். திருமணமாகி ஒரு மகன் உள்ளார். விழுப்புரத்தில் நடந்த திருமண விழாவுக்கு, ஈரோட்டில் இருந்து, 16 வயது சிறுமி பெற்றோருடன் சென்றார். விழாவில் பங்கேற்ற இளந்தமிழன், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி சிறுமியின் பெற்றோர், ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்தனர். இன்ஸ்பெக்டர் ராஜநளாயினி விசாரித்தார். ஆனால், கால தாமதம் ஏற்படுத்தி வருவதாக, ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் சிறுமியின் பெற்றோர் புகாரளித்தனர். புகாரை விசாரித்த எஸ்.பி., ஜவகர், இன்ஸ்பெக்டர் ராஜநளாயினியை ஈரோடு ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.அதேசமயம் வழக்கை விசாரிக்க டவுன் இன்ஸ்பெக்டர் கோமதிக்கு உத்தரவிட்டார். விசாரணை நடத்திய கோமதி, போக்சோ பிரிவில் இளந்தமிழனை கைது செய்தார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஈரோடு கிளை சிறையில் இளந்தமிழன் அடைக்கப்பட்டார்.
22-Sep-2024