உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சிறுத்தை நடமாட்டம் அதிகாரி விளக்கம்

சிறுத்தை நடமாட்டம் அதிகாரி விளக்கம்

தாராபுரம்: தாராபுரம்-ஒட்டன்சத்திரம் சாலை சந்திப்பு அருகே, சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக தகவல் பரவியதால், வனத்துறையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர். காங்கேயம் வனச்சரக அலுவலர் மவுனிகா, நேற்று அப்பகுதியில் ஆய்வில் ஈடுபட்டார்.அப்போது அவர் கூறியதாவது: இரண்டு நாட்களாக ஆய்வு செய்ததில், சிறுத்தை நடமாட்டத்துக்கான தடயம் ஏதுமில்லை. இந்தப் பகுதியில் சிறுத்தை வருவதற்கான முகாந்திரமும் இல்லை. எனவே மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ