மப்பில் வாகனம் இயக்கிய 58 பேரின் உரிமம் ரத்து
ஈரோடு, ஈரோடு தெற்கு போக்குவரத்து போலீசார், இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையில், மாநகரில் கடந்த மாதம், பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். இதில் மதுபோதையில் வாகனம் இயக்கியதாக, 58 வழக்கு, டூவீலரில் ஹெல்மெட் அணியாமல் சென்றதாக, 580, ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் இயக்கியதாக, 35, மொபைல் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக, 40, சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதாக, 20 வழக்குகள் உள்பட பல்வேறு விதிமீறல் தொடர்பாக, 1,018 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு செய்தனர். இவர்களிடம், ௫ லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்தனர். குடிபோதையில் வாகனம் இயக்கிய, 37 இரு சக்கர வாகன ஓட்டிகள், 21 இலகு ரக வாகன ஓட்டிகளின் ஓட்டுநர் உரிமத்தை, தற்காலிகமாக ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலர்களுக்கு பரிந்துரைத்தனர்.