உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாராயம் காய்ச்சியவர் குண்டாசில் கைது

சாராயம் காய்ச்சியவர் குண்டாசில் கைது

ஈரோடு: திருப்பூர் மாவட்டம் அவினாசி எம். வரப்பாளையத்தை சேர்ந்தவர் அந்தோணி சாமி, 50. கோபி பகுதியில் ஐந்து லிட்டர் சாராயம், 50 லிட்டர் சாராய ஊறலுடன் கடந்த, 25 நாட்களுக்கு முன் கோபி மதுவிலக்கு போலீசாரிடம் சிக்கினார். இவர் கோபி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என, மதுவிலக்கு போலீசார் ஈரோடு எஸ்.பி., ஜவகர் வாயிலாக ஈரோடு கலெக்டருக்கு பரிந்துரைத்தனர். ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பரிசீலனை செய்து அந்தோணி சாமியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை