உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில், கதளி ஒரு கிலோ, 30 ரூபாய், நேந்திரன், 38 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 400, தேன்வாழை, 310, செவ்வாழை, 910, ரஸ்த்தாளி, 620, பச்சைநாடான், 310, ரொபஸ்டா, 280, மொந்தன், 230 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 6,700 வாழைத்தார்களும், 8.13 லட்சம் ரூபாய்க்கு விற்றன.* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. ஏலத்துக்கு, 17 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 100 ரூபாய் முதல் 135 ரூபாய் வரை, 8.59 குவிண்டால் தேங்காய் பருப்பு, 93 ஆயிரம் ரூபாய்க்கு விற்றது.* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நிலக்கடலை ஏலம் நடந்தது. ஏலத்துக்கு, 337 காய்ந்த நிலக்கடலை மூட்டை வந்தது. ஒரு கிலோ, 66.76 ரூபாய் முதல் 75.81 ரூபாய் வரை, 8.21 லட்சம் ரூபாய்க்கு விற்றது.* சத்தி பூ மார்க்கெட்டில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ ஒரு கிலோ, 1,940 ரூபாய்க்கு ஏலம்போனது. இதேபோல் முல்லைப-810, காக்கடா-850, செண்டுமல்லி-45, கோழிகொண்டை-65, ஜாதிமுல்லை-150, சம்பங்கி-80, அரளி-180, துளசி-50, செவ்வந்தி-160 ரூபாய்க்கும் விற்பனையானது.* புளியம்பட்டி வாரச்சந்தை நேற்று நடந்தது. இதில், 800க்கும் மேற்பட்ட சின்ன வெங்காய மூட்டை விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. வழக்கமாக, 400 மூட்டை வரும் நிலையில், ஒரு மடங்கு வரத்து கூடியது. இதனால் விலை சரிந்து கிலோ, 20 ரூபாய்க்கு விற்பனையானது. பலர் போட்டி போட்டு, மூட்டை மூட்டையாக வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை