மேலும் செய்திகள்
தேங்காய் பருப்பு ஏலம்
21-Feb-2025
உள்ளூர் வர்த்தக செய்திகள்* ஈரோடு மாவட்டம் சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 461 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 65.86 மதல், 75.20 ரூபாய் வரை, 14,435 கிலோ நிலக்கடலை, 10.௧௪ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. ஏலத்தில் கதளி ஒரு கிலோ, 45 ரூபாய், நேந்திரன், 46 ரூபாய்க்கும் விற்பனையானது. பூவன் தார், 430, தேன்வாழை, 610, செவ்வாழை, 900, ரஸ்த்தாளி, 630, பச்சைநாடான், 430, ரொபஸ்டா, 520, மொந்தன், 280 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 7,570 வாழைத்தார்களும், 14.93 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* கோபி ஒழுங்குமுறை விறபனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. ஒரு கிலோ, 165 ரூபாய் முதல் 168 ரூபாய் வரை, வரத்தான, 899 கிலோ தேங்காய் பருப்பு, 1.39 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் தாளவாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 20 மூட்டை வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 16௪ ரூபாய்; குறைபட்சம், 121.11 ரூபாய்க்கும் ஏலம் போனது* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் ஜாதி முல்லை ஒரு கிலோ, 750 ரூபாய்க்கு ஏலம் போனது. மல்லிகை, 420, முல்லை, 720, காக்கடா, 300, செண்டு மல்லி, 40, கோழிக்கொண்டை, 51, கனகாம்பரம், 300, சம்பங்கி, 70, அரளி, 50, துளசி, 40, செவ்வந்தி, 140 ரூபாய்க்கும் விற்பனையானது.
21-Feb-2025