உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. குறைந்த விலை (கிலோ), 63 ரூபாய், அதிகவிலை, 65 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 852 கிலோ தேங்காய், 54 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. தேங்காய் பருப்பு ஏலத்தில் இரண்டாம் தரம் கிலோ, 146 ரூபாய், தேங்காய் தொட்டி கிலோ, 27 ரூபாய்க்கும் விற்றது.* சத்தியமங்கலம் பூ சந்தையில் நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகை பூ கிலோ, 840 ரூபாய்க்கு ஏலம் போனது. முல்லை பூ-360, காக்கடா-390, செண்டுமல்லி-90, கோழி கொண்டை-60, ஜாதிமுல்லை-500, கனகாம்பரம்-600, சம்பங்கி-50, அரளி-220, துளசி-50, செவ்வந்தி-120 ரூபாய்க்கும் விற்பனையானது.* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 4,500 காய் வரத்தானது. ஒரு கிலோ அதிகபட்சம், 71 ரூபாய், குறைந்தபட்சம், 68.69 ரூபாய் என, 27.22 குவிண்டால், 1.92 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 92 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 215.60 - 222.69 ரூபாய், இரண்டாம் தரம், 150 - 203.05 ரூபாய் என, 1,930 கிலோ கொப்பரை, 3.௮௦ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த சூரியகாந்தி விதை ஏலத்துக்கு, 46 ஆயிரம் கிலோ வரத்தானது. ஒரு கிலோ, 54.18 ரூபாய் முதல் 64.39 ரூபாய் வரை, 28.௨௪ லட்சம் ரூபாய்க்கு விற்றது. * கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. ஒரு காய், 20 ரூபாய் முதல் 43 ரூபாய் வரை, வரத்தான, 26 ஆயிரத்து, 300 தேங்காய்களும், 8.53 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்தில், 113 மூட்டை காய்ந்த நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ, 70 ரூபாய் முதல் 75 ரூபாய் வரை, 2.99 லட்சம் ரூபாய்க்கு விற்றது.