உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உள்ளூர் வர்த்தக செய்திகள்

உள்ளூர் வர்த்தக செய்திகள்

* ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் கூட்டுறவு சங்-கத்தில் நடந்த வாழை ஏலத்தில், செவ்வாழை தார், 60 ரூபாய் முதல் 600 ரூபாய்; தேன்வாழை தார், 120-450 ரூபாய், பூவன் தார், 120-650, ரஸ்தாளி தார், 280-520, மொந்தன் தார், 40-200, ஜி-9 தார், 40-160, பச்சை நாடன் தார், 150-250 ரூபாய்க்கு விற்-றது. கதளி கிலோ, 22-45 ரூபாய், நேந்திரன் கிலோ, 8-22 ரூபாய் என, 2,720 வாழைத்தார், 4.34 லட்சம் ரூபாய்க்கு விற்றது.* அந்தியூர் வார சந்தை வளாகத்தில் இரு நாட்கள் கால்நடை சந்தை நடந்தது. இதில் விற்பனைக்காக, 4,௦௦௦க்கும் மேற்பட்ட கால்நடைகளை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஜெர்சி மாடுகள், 2,௦௦௦ ரூபாய் முதல் 48 ஆயிரம் ரூபாய், நாட்டு மாடு, 3,௦௦௦ ரூபாய் முதல் 55 ஆயிரம் ரூபாய், மலை மாடுகள், 3,௦௦௦ ரூபாய் முதல் 54 ஆயிரம் ரூபாய், எருமை, 3,௦௦௦ ரூபாய் முதல் 58 ஆயிரம் ரூபாய் வரை, 1 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.* அவல் பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேங்காய் ஏலம் நடந்தது. மொத்தம், 9,701 தேங்காய் வரத்தா-னது. ஏலத்தில் பச்சை தேங்காய் கிலோ, 52.19 ரூபாய் முதல் 67.79 ரூபாய்க்கு ஏலம் போனது. கசங்கல் தேங்காய், 6௮ ரூபாய் முதல் 73.63 ரூபாய் வரை, 2.92 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.* திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நத்தக்காடையூர் அருகே, பழையகோட்டை மாட்டுத்தாவணியில் காங்கேயம் இன மாடுக-ளுக்கான சந்தை நேற்று நடந்தது. மாடுகள், காளைகள், கிடாரி மற்றும் காளை கன்றுகள் என, 35 கால்நடைகள் வரத்தாகின. மாடுகள், 20 ஆயிரம் ரூபாய் முதல் 73 ஆயிரம் ரூபாய் வரை விற்-றன. கிடாரி கன்று, 12 ஆயிரம் முதல், 40 ஆயிரம் வரை விற்றது. மொத்தம், 23 கால்நடைகள் எட்டு லட்சம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ