உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 480 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்தானது. முதல் தரம் கிலோ, 220.50 - 22௮ ரூபாய், இரண்டாம் தரம், 160.49 - 221.69 ரூபாய் வரை, 21,234 கிலோ கொப்பரை தேங்காய், 45.46 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.*கொடுமுடி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 439 மூட்டை நிலக்கடலை வரத்தானது. ஒரு கிலோ நிலக்கடலை, 57.50 - 75.21 ரூபாய் வரை, 13,860 கிலோ, 9.௪௪ லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.* பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 811 தேங்காய் வரத்தாகி, கிலோ, 49.30 - 74.20 ரூபாய்க்கு விற்றது. இதேபோல் நெல், 23 மூட்டை வரத்தாகி, கிலோ, 17.15 - 21.61 ரூபாய்; தேங்காய் பருப்பு, 31 மூட்டை வரத்தாகி, கிலோ, 180.95 - 228.09 ரூபாய்; நிலக்கடலை, 264 மூட்டை வரத்தாகி, கிலோ, 67.41 - 73.73 ரூபாய்; எள் ஆறு மூட்டை வரத்தாகி கிலோ, 113.76 - 114.29 ரூபாய்க்கு விலை போனது.* அந்தியூர் புதுப்பாளையம் விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த வாழைத்தார் ஏலத்தில், செவ்வாழை தார், 120-750 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல் தேன் வாழைத்தார், 110-450, பூவன் தார், 80-520, ரஸ்தாளி, 270-600, மொந்தன், 40-220, ஜி-9 தார், 60-200, பச்சைநாடன் தார், 190-350, கதளி கிலோ, 20-42 ரூபாய், நேந்திரன் கிலோ, 8-20 ரூபாய்க்கும், 2,900 வாழைத்தார், 5.81 லட்சம் ரூபாய்க்கு விற்றது.