மேலும் செய்திகள்
ரூ.1.36 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை
18-Oct-2025
* மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் எள் ஏலம் நடந்தது. வெள்ளை எள், 26 மூட்டை வரத்தாகி கிலோ, 86.59-119 ரூபாய் வரை விலை போனது.* கவுந்தப்பாடி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்துக்கான ஏலம் நேற்று நடந்தது. முதல் தரம் (திடம்), 60 கிலோ மூட்டையாக, 2,910 ரூபாய் முதல், 3,000 ரூபாய் வரை விற்றது. இரண்டாம் தரம் (மீடியம்), 2,760 ரூபாய் முதல், 2,790 ரூபாய் வரை விற்றது. வரத்தான, 2,499 மூட்டைகளும், 69.87 லட்சம் ரூபாய்க்கு விற்றது. உருண்டை வெல்லம், 30 மூட்டை (30 கிலோ) வரத்தானது. ஒரு மூட்டை, 1,620 ரூபாய்க்கு விற்றது. நாட்டு சர்க்கரை மற்றும் உருண்டை வெல்லத்தை, பழநி கோவில் தேவஸ்தான நிர்வாகம், 70.36 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்தது.* சித்தோடு வெல்லம் சொசைட்டியில் நேற்று, 30 கிலோ எடை கொண்ட, 3,100 மூட்டை நாட்டு சர்க்கரை வரத்தானது. ஒரு மூட்டை, 1,280 - 1,380 ரூபாய்க்கு விற்பனையானது. உருண்டை வெல்லம், 3,600 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,310 - 1,380 ரூபாய்; அச்சு வெல்லம், 150 மூட்டை வரத்தாகி ஒரு மூட்டை, 1,380 - 1,440 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தைவிட உருண்டை வெல்லம் மூட்டைக்கு, 60 ரூபாய் விலை குறைந்தது. நாட்டு சர்க்கரை, அச்சு வெல்லம் மூட்டைக்கு, 30 ரூபாய் விலை குறைந்தது.* பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், நேற்று நடந்த கொப்பரை தேங்காய் ஏலத்துக்கு, ௩,527 மூட்டைகளில், ௧.௬௩ லட்சம் கிலோ வரத்தானது. முதல் தரம் கிலோ, 21௪ ரூபாய் முதல் 225.10 ரூபாய்; இரண்டாம் தரம், 36.89 ரூபாய் முதல் 223 ரூபாய் வரை, 341 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.* கோபி அருகே மொடச்சூரில், பருப்பு மற்றும் பயிர் ரகங்கள் விற்பனைக்கான வாரச்சந்தை நேற்று கூடியது. துவரம் பருப்பு (கிலோ), குண்டு உளுந்து, தலா 120 ரூபாய்க்கும், பச்சைபயிர், பாசிப்பருப்பு, தலா 140 ரூபாய்க்கும் விற்பனையானது. கடலைப்பருப்பு, கடுகு, வெந்தயம், வெள்ளை சுண்டல், தலா 100 ரூபாய்; சீரகம், 340, பொட்டுக்கடலை, 110, கருப்பு சுண்டல், 90, மல்லி, 130, வரமிளகாய், 180, புளி, 180 முதல், 200 ரூபாய், பூண்டு, 80 முதல் 200 ரூபாய்க்கும் விற்பனையானது. * சிவகிரி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 44 மூட்டை எள் வரத்தானது. கருப்பு ரகம் கிலோ, 99-137.09 ரூபாய், சிவப்பு ரகம், 75.09 - 124.20 ரூபாய், வெள்ளை ரகம், 69.69 - 106.50 ரூபாய் வரை, 3,248 கிலோ எள், 3.௩௩ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* அவல்பூந்துறை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு, 15,509 தேங்காய் வரத்தானது. கிலோ பச்சை தேங்காய், 59.41 - 67.19 ரூபாய், கசங்கல் தேங்காய், 7௨-76.77 ரூபாய் என, 5,281 கிலோ, 3.௪௫ லட்சம் ரூபாய்க்கு விற்றது.* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் மற்றும் தேங்காய் ஏலம் நேற்று நடந்தது. கதளி கிலோ, 28 ரூபாய், நேந்திரன், 27 ரூபாய்க்கும் விற்பனையானது. செவ்வாழை தார், 620, தேன்வாழை, 430, பூவன், 360, ரஸ்த்தாளி, 510, மொந்தன், 270, ரொபஸ்டா, 310, பச்சைநாடான், 410, ரூபாய்க்கும் விற்றது. தேங்காய் ஏலத்தில் ஒரு காய், 18 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை விற்றது.
18-Oct-2025