உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காங்கேயம், தாராபுரத்தில் லோக் அதாலத் 560 வழக்குகளுக்கு தீர்வு

காங்கேயம், தாராபுரத்தில் லோக் அதாலத் 560 வழக்குகளுக்கு தீர்வு

காங்கேயம், தமிழகம் முழுவதும் லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடந்த நீதிமன்றத்துக்கு, காங்கேயம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதித்துறை நடுவர் தேன்மொழி முதல் அமர்விலும், ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன், வக்கீல் ஜெகதீசன் இரண்டாவது அமர்விலும் பங்கேற்றனர். மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, குடும்ப நல வழக்கு, சொத்து வழக்கு, மோட்டார் வாகன சிறு வழக்குகள் என, 388 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில், 328 வழக்குகளுக்கு சமரசம் காணப்பட்டது.தாராபுரத்தில்...தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மூன்றாவது கூடுதல் மாவட்ட நீதிபதி சரவணன் தலைமையில், மக்கள் நீதிமன்றம் நடந்தது. சார்பு நீதிபதி சக்திவேல், ஓய்வு நீதிபதி நாகராஜன், உரிமையியல் நீதிபதி பாண்டி மகாராஜா, குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன்னிலையில், 172 குற்றவியல் சிறு வழக்கு, 47 உரிமையியல் வழக்கு என, 232 வழக்குகளுக்கு, 14.௦௫ கோடி ரூபாய் மதிப்பில் தீர்வு காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை