உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

கிராவல் மண் கடத்திய லாரி பறிமுதல்

காங்கேயம்:காங்க்யம் அருகே ஊதியூர் பகுதியில், சட்டவிரோத கிராவல் மண், கற்கள் கடத்துவதாக வந்த புகாரின்படி, தாராபுரம் துணை தாசில்தார் தேன்மொழி தலைமையில், சங்கரன்டாபாளையம் நில வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் குழுவினர் ரோந்தில் ஈடுபட்டனர். மாராபாளையம் அருகே ஒரு டிப்பர் லாரியை சோதனை செய்தனர். உரிய அனுமதி பெறாமல் கடத்தி செல்வது தெரிய வந்தது. லாரியை பறிமுதல் செய்து, ஊதியூர் போலீசில் ஒப்படைத்தனர். லாரி உரிமையாளர், டிரைவர் மீதும் போலீசில் புகாரளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ