உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிராவல் கடத்திய லாரி பறிமுதல்

கிராவல் கடத்திய லாரி பறிமுதல்

காங்கேயம், வெள்ளகோவில் பகுதியில் கனிம வள கடத்தல் தொடர்பாக சென்ற புகாரின்படி, திருப்பூர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் வெங்கடேசன் தலைமையிலான குழுவினர், செட்டியார்பாளையம் பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது வந்த ஒரு லாரியில் கிராவல் மண் இருந்தது. ஆனால், உரிய அனுமதி இல்லை. லாரியை பறிமுதல் செய்து வெள்ளகோவில் போலீசில் ஒப்படைத்தனர். லாரி உரிமையாளர் முத்துார், புதுப்பாளையம் லீலாவதி என தெரிந்தது. வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !