உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடிபோதை கணவனால் காதல் மனைவி தற்கொலை

குடிபோதை கணவனால் காதல் மனைவி தற்கொலை

பவானி: சித்தோடு அடுத்த பேரோடு, பெரியமேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் அபர்ணா, 27; அரசு ஐ.டி.ஐ.,யில் எலக்ட்டீரிசியன் பிரிவில் படித்தவர். அப்போது அவருடன் படித்தவர் வெள்ளித்திருப்பூரை சேர்ந்த கண்ணுசாமி. இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில், தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். சித்தோட்டில் ஒரு மொபைல்போன் கடைக்கு அபர்ணா வேலைக்கு சென்று வந்தார். கண்ணுசாமியோ தினமும் குடித்துவிட்டு, மனைவி, மகனுடன் சண்டை போட்டுள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த அபர்ணாவை, பெற்றோர் சமாதானப்படுத்தி வந்தனர். வீட்டில் அபர்ணா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை