வேனில் ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
ஈரோடு, வெள்ளித்திருப்பூர் அருகே ரேஷன் அரிசி கடத்தல் நடப்பதாக, ஈரோடு மாவட்ட குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் வந்தது. பறக்கும் படை தாசில்தார் ஜெயக்குமார், இன்ஸ்பெக்டர் ராஜகுமார், எஸ்.ஐ., மேனகா ஆகியோர் ஒலகடம் காந்திசிலை பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு ஆம்னி வேனில், 1,650 கிலோ ரேஷன் அரிசி கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. டிரைவரான நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்த சரவணனை, கைது செய்து, அரிசியை பறிமுதல் செய்தனர்.