உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரும்பு கம்பிகள் திருடியவர் கைது

இரும்பு கம்பிகள் திருடியவர் கைது

மொடக்குறிச்சி, மொடக்குறிச்சியை அடுத்த ஆண்ட கெத்தாம்பாளையம் கிரீன் சிட்டி வளாகத்தில், 25 கிலோ பழைய இரும்பு கம்பி, 6 கிலோ செம்பு கம்பிகள், பம்ப் செட் மின் ஒயர், 17 மீட்டர் திருட்டு போனது. இதுகுறித்து கிரீன் சிட்டி உரிமையாளர் பழனிச்சாமி புகாரில், மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வந்தனர்.இதில், ஈரோடு, சாஸ்திரி நகர், வாய்க்கால் மேட்டை சேர்ந்த லட்சுமணன் மகன் நந்தகுமார், 19, என்பவரை கைது செய்தனர். இவர் கட்டட தொழிலாளி. இவர் மாமரத்துபாளையத்தில் டூவீலர் திருடியதும் விசாரணையில் தெரிய வந்தது. திருட்டு தொடர்பாக தலைமறைவாக உள்ள, மற்றொரு வாலிபரை மொடக்குறிச்சி போலீசார் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி