மரக்கிளை விழுந்ததில் காயமடைந்தவர் சாவு
சத்தியமங்கலம், டிச. 4-கோவையை சேர்ந்த டிரைவர் நவநீத கிருஷ்ணன் மகன் விக்ரம், 20; கோவை தனியார் கல்லுாரி டிப்ளமோ கல்லுாரி மாணவர். சத்தி அருகே பகுத்தம்பாளையத்தில் உறவினரை பார்ப்பதற்காக, டூவீலரில் நவ., 9ம் தேதி வந்தார். பார்த்து விட்டு கோவை திரும்பினார். கெஞ்சனுார் அருகில் மூலக்கடை என்ற இடத்தில், சாலையோர மரக்கிளை முறிந்து விக்ரம் தலை மீது விழுந்தது. இதில் படுகாயமடைந்த மாணவனை, அப்பகுதி மக்கள் மீட்டு சத்தி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் விக்ரம் இறந்து விட்டார். சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.