மேலும் செய்திகள்
26ம் தேதி மாரத்தான் ஓட்டம்
16-Jun-2026
ஈரோடு:சர்வதேச போதைப்பொருள் தடுப்பு தினத்தையொட்டி வரும், 26ல் ஈரோட்டில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 5 கி.மீ., விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடக்கிறது. போட்டியில், 14 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொள்வோர், 25ம் தேதி மாலை, 6:00 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும். போட்டியில் பங்கேற்கும் முதல், 500 பேருக்கு விழிப்புணர்வு டி--சர்ட் வழங்கப்படும் என்று, விளையாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
16-Jun-2026