உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரியம்மன் கோவில் விழா

மாரியம்மன் கோவில் விழா

ஈரோடுஈரோடு, மோளகவுண்டம்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு பொங்கல் விழா கடந்த மாதம், 24ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து, 26ம் தேதி கம்பம் நடப்பட்டது. இதை தொடர்ந்து இரவில் தினமும் அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. 31ம் தேதி காவிரி ஆற்றுக்கு நுாற்றுக்கணக்கான பக்தர்கள் சென்று புனித நீர் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. முக்கிய நிகழ்வான பொங்கல் வைபவம், 1ம் தேதி அதிகாலை தொடங்கி நடந்தது. இதை தொடர்ந்து மாவிளக்கு ஊர்வலம் விமரிசையாக நடந்தது. ௨ம் தேதி கம்பம் பிடுங்குதல், மறு பூஜையுடன் விழா நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை