உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரியம்மன் கோவில் விழா புனிதநீர் ஊற்றி வழிபாடு

மாரியம்மன் கோவில் விழா புனிதநீர் ஊற்றி வழிபாடு

ஈரோடு: ஈரோடு வீரப்பன்சத்திரத்தில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. நடப்பாண்டு பொங்கல் விழா, நேற்று முன்தினம் இரவு பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து கம்பம் நடப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதையடுத்து, நேற்று அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி அம்மனை தரிசனம் செய்தனர். வரும், 30 மாலை 4:00 மணிக்கு தீர்த்தம் புறப்பாடு, 31ல் பொங்கல் வைத்தல், மாவி-ளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. ஜன.,1 காலை 7:33 மணிக்கு கம்பம் எடுத்தல், 10 மணிக்கு அம்மன் மலர் பல்லக்கு திருவீதி உலா, மஞ்சள்நீர் விழா, ஜன.,2ல் இரவு 7:00 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி