மேலும் செய்திகள்
காதல் ஜோடி தஞ்சம்
02-Jul-2025
சென்னிமலை, சென்னிமலை யூனியன் முருங்கத்தொழுவு ஊராட்சி, தாசன்காட்டை சேர்ந்த கந்தசாமி மகன் தினேஷ்குமார், 25; சிப்காட் தனியார் நிறுவன ஊழியர். திருப்பூர் மாவட்டம் உடுமலை, மூங்கில் தொழுவு செல்வராஜ் மகள் காளீஸ்வரி, 22; இருவரும் நான்கு வருடங்களாக காதலித்து வந்தனர். திருமணத்துக்கு காளீஸ்வரி பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், தினேஷ்குமார் வீட்டுக்கு நேற்று வந்து விட்டார். வெள்ளோட்டில் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டு. பாதுகாப்பு கோரி சென்னிமலை போலீசில் தஞ்சமடைந்தனர். காளீஸ்வரியின் பெற்றோர் திருமணத்தை ஏற்காததால், தினேஷ்குமாருடன் அனுப்பி வைத்தனர்.
02-Jul-2025