உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாருதி மெடிக்கல் சென்டர் சார்பில் 30 மாணவிகளுக்கு புத்தாடை

மாருதி மெடிக்கல் சென்டர் சார்பில் 30 மாணவிகளுக்கு புத்தாடை

ஈரோடு: ஈரோடு, பெருந்துறை ரோடு மாருதி மெடிக்கல் சென்டர் மற்றும் கவிதாலயம் சார்பில், ௩௦ கல்லுாரி மாணவிகளுக்கு இலவச புத்தாடை வழங்கும் விழா, இடையன்காட்டுவலசு இந்து கல்வி நிலையத்தில் நடந்தது. கவிதாலயம் ராமலிங்கம் வரவேற்றார். வாழ்க வளமுடன் கொல்லம்பாளையம் அய்யாவு முன்னிலை வகித்தார். விஷால் எண்டர்பிரைசஸ் நாயக் தலைமை வகித்தார். எளிய குடும்பத்தை சார்ந்த கல்லுாரிகளில் படித்து வரும், ௩௦ மாணவிகளுக்கு, ௨௫ ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இலவச புத்தாடைகளை, பெருந்துறை ரோடு மாருதி மெடிக்கல் சென்டர் மேனேஜிங் டைரக்டர் பிரபல சீனியர் டாக்டர் சதாசிவம் வழங்கினார். விழாவில், மாரீஸ் வேணுகோபால், ஆர்.எஸ்.டிரேடர்ஸ் சான்டல் மாரிதாஸ், அரிமா பந்தா செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கவிதாலயம் மகளிர் அணி தலைவி வெண்ணிலா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை