மாநகராட்சியில் மாஸ் கிளீனிங் 18 டன் சாக்கடை கழிவு அகற்றம்
ஈரோடு :ஈரோடு மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட, 24வது வார்டு சின்னப்பா லே அவுட், இரண்டாவது மண்டலத்தில், 5, 8, 36 வது வார்டுக்கு உட்பட்ட வ.உ.சி., பார்க், தொட்டம்பட்டி, செங்குந்தர்நகர், மூன்றாவது மண்டலம், 51 வார்டுக்கு உட்பட்ட மணல்மேடு, நான்காவது மண்டலத்தில், 57வது வார்டில் முத்துசாமி காலனி பகுதிகளில், மாஸ் கிளீனிங் நேற்று நடந்தது. இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இதில், 18 டன் சாக்கடை கழிவு அகற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.