டி.ஐ.ஜி., தலைமையில் ஈரோட்டில் கூட்டம்
டி.ஐ.ஜி., தலைமையில் ஈரோட்டில் கூட்டம்ஈரோடு, கோவை டி.ஐ.ஜி., சசிமோகன் தலைமையில், ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. எஸ்.பி., ஜவகர், ஏ.டி.எஸ்.பி.,க்கள், டி.எஸ்.பி.கள், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர். மாவட்டத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் விபரம், நிலுவை வழக்குகளின் நிலை, அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான வழிமுறை குறித்து, அதிகாரிகளிடம் கேட்டறிந்து விரைந்து தீர்வு காண அறிவுரை கூறினார்.