உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொங்கு பொறியியல் கல்லுாரி சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கொங்கு பொறியியல் கல்லுாரி சார்பில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஈரோடு, டிச. ௧௪-சென்னை சிம் இன்போ சிஸ்டம்ஸ் நிறுவன உதவியுடன், கெமிக்கல் சிமுலேசன் ஸ்டடீஸ்க்கான சென்டர் ஆப் எக்ஸலன்ஸை, பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லுாரியின் வேதியியல் பொறியியல் துறை திறந்து வைத்தது. அதிநவீன உருவகப்படுத்துதல் தொழில் நுட்பங்கள் மூலம் ரசாயன பொறியியல் கல்வி மற்றும் தொழில் துறையில் புரட்சியை ஏற்படுத்துவதை இந்த மையம் நோக்கமாக கொண்டுள்ளது. தொடக்க விழாவில் சென்னையை சேர்ந்த நீர் மற்றும் எரிசக்தி தொழில் நுட்பத்துறை ஆலோசனை நிபுணர் வெங்கட் சுப்ரமணியன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். சிம் இன்போ சிஸ்டம்ஸ் நிறுவனர் ராமன், கல்லுாரி முதல்வர் பாலுசாமி, வேதியியல் பொறியியல் துறைத்தலைவர் சங்கீதா கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இரு தரப்பினரிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் தொழில் துறை கல்வி கூட்டாண்மைகளை மேம்படுத்த இயலும். தொழில் துறையில் புதுமை மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றில், மாணவர்களை ஈடுபடுத்த முடியும் என்று, கல்லுாரி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி