மேலும் செய்திகள்
வணிகர்கள் மாநாடு வியாபாரிகளுக்கு அழைப்பு
04-May-2025
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா, மாநில பொருளாளர் சதகத்துல்லா நாளை வருகின்றனர். அன்று காலை, 9:00 மணிக்கு ஈரோடு வ.உ.சி., பூங்கா வளாக நேதாஜி தினசரி மார்க்கெட்டில், கனி வணிகர் சார்பில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகையை திறந்து வைக்கிறார். வெங்காயம், பழங்கள் மொத்த வணிகர் சங்க பெயர் பலகையை திறந்து வைத்து, அடையாள அட்டை வழங்குகிறார். 10:30 மணிக்கு பி.பெ.அக்ரஹாரம் வியாபாரிகள் சங்க, 18ம் ஆண்டு விழாவிலும், 11:30 மணிக்கு ஈரோடு பரிமளம் மஹாலில் டிஜிட்டல் பிரிண்டிங் சங்க, 15ம் ஆண்டு பொதுக்கூட்டத்திலும் விக்கிரமராஜா பேசுகிறார். மாலை, 4:00 மணிக்கு நம்பியூர் டவுன் பஞ்., கடை வியாபாரிகள் சார்பில் அருண் மகாலில் முப்பெரும் விழா; மாலை, 6:00 மணிக்கு புன்செய்புளியம்பட்டி வியாபாரிகள் சங்கம் சார்பில் பாக்கியலட்சுமி மகாலில் ஐம்பெரும் விழாவிலும் பங்கேற்று நலத்திட்ட உதவி வழங்குகிறார்.நிகழ்ச்சிகளில் ஈரோடு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலர் ராமசந்திரன், மாநில பொருளாளர் உதயம் செல்வம், இளைஞரணி லாரன்ஸ் ரமேஷ், சேரன், சரவணன், அந்தோணி யூஜின் பங்கேற்கின்றனர்.
04-May-2025