உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குடியேற்ற சங்க விவசாயிகள் பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு

குடியேற்ற சங்க விவசாயிகள் பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு

ஈரோடு, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில், வடுகப்பட்டி கூட்டுறவு வேளாண்மை குடியேற்ற சங்கத்தை சேர்ந்தவர்கள் மனு வழங்கி கூறியதாவது:மொடக்குறிச்சி தாலுகா வடுகப்பட்டி கிராமத்தில் இருந்த கூட்டுறவு வேளாண்மை குடியேற்ற சங்க உறுப்பினர்களாக உள்ளோம். இச்சங்கம் மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட, 464.60 ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்து வந்தோம். சங்கத்தில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டு, 146 பேருக்கு வழங்கப்பட்டது. மீதி, 100 ஏக்கருக்கு மேல் நிலம் இருந்தும், 50க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்படவில்லை. இதற்கிடையில் சங்கத்தை கலைத்துவிட்டு, 'அனாதீனம்' என வகை மாற்றம் செய்து வருவாய் துறையினர் பதிவு செய்தனர். அத்துடன் அவ்விடத்தில் வேறு நபர்களுக்கு பட்டா வழங்க முயற்சிக்கின்றனர்.எங்களது வாழ்வாதாரமான அவ்விடத்தில் மழைக்காலங்களில் மட்டும் நாங்கள் பயிர் செய்தும், பயன்படுத்தியும் வருகிறோம். கீழ்பவானி திட்ட பாசனம் மூலம் எங்களுக்கு பாசன வசதி செய்து கொடுக்க பொதுப்பணித்துறை ஏற்பாடு செய்து வருகிறது. எங்களில் பட்டா கிடைக்காதவர்களுக்கு முறையாக பட்டா வழங்கி, அவ்விடத்தை எங்களுக்கே ஒதுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை