உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ., அரசால் தமிழக பாதிப்பு குறித்து வீடு வீடாக பிரசாரம் இன்று துவங்கும் என அமைச்சர் தகவல்

பா.ஜ., அரசால் தமிழக பாதிப்பு குறித்து வீடு வீடாக பிரசாரம் இன்று துவங்கும் என அமைச்சர் தகவல்

ஈரோடு, 'பா.ஜ., அரசால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து, 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற இயக்கத்தில் வீடு வீடாகவும், பொதுக்கூட்டம் மூலம் மக்களிடம் தெரிவிக்க உள்ளோம்,'' என்று, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.ஈரோட்டில் நேற்று அவர் கூறியதாவது:'ஓரணியில் தமிழ்நாடு' என்பது உறுப்பினர் சேர்க்கைக்கானதல்ல. தமிழக நலன் காக்கவும், மத்திய அரசால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை மக்களிடம் எடுத்து செல்கிறோம். மத்திய அரசால் தமிழகம் நிதி, திட்டங்கள், ஒதுக்கீடு என அனைத்திலும் பாதிக்கப்படுகிறது. கல்வி நிதி மறுக்கப்படுகிறது.லோக்சபா தொகுதி குறைக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், மக்கள் பிரச்னைகள் மத்திய அரசிடம் தெரிவிக்க இயலாத நிலை ஏற்படும்.இதற்கான இயக்கத்தில் இன்று தி.மு.க., கட்சியின் மாவட்ட அமைப்புகள் சார்பில் பொதுக்கூட்டமும், வரும், 3 அன்று பூத் வாரியாக ஓட்டுச்சாவடி முகவர்கள் தலைமையில், 10, 15 பேர் சேர்ந்து ஒவ்வொரு வீடாக சென்று, தமிழக பாதிப்பை தெரிவிப்பார்கள்.இம்மாவட்டத்தில், 8 தொகுதியில் உள்ள, 2,222 ஓட்டுச்சாவடியிலும் இப்பணி நடக்கும். இப்பணி அடுத்த, 45 நாட்களுக்கு நடக்கும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !