உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாநகராட்சி வார்டு சிறப்பு கூட்டம் மக்களிடம் மனு பெற்ற அமைச்சர்

மாநகராட்சி வார்டு சிறப்பு கூட்டம் மக்களிடம் மனு பெற்ற அமைச்சர்

ஈரோடு, ஈரோடு மாநகராட்சியில் அளிக்கப்படும் மக்கள் சேவை தொடர்பாக, மாநகராட்சி வார்டுகளில் சிறப்பு கூட்டம் நேற்று தொடங்கியது. இன்றும், நாளையும் நடக்கிறது. இதன்படி, 50வது வார்டுக்கான கூட்டம் சுப்ரமணியம் நகர் மாநகராட்சி ஸ்டெம் பார்க் வளாகத்தில் நேற்று நடந்தது. மேயர் நாகரத்தினம் தலைமை வகித்தார். வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, மக்களிடம் மனுக்களை பெற்றார்.முன்னதாக கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது:குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, சாலைகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு பணிகளை மாநகராட்சி செய்து வருகிறது. இதில் குறைபாடு உள்ளதை சுட்டிக்காட்டி மக்கள் மனு அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சோலார் புது பஸ் ஸ்டாண்ட் பணி நிறைவு பெறும் நிலையில் உள்ளதால், விரைவில் முதல்வர் திறந்து வைக்கவுள்ளார். இவ்வாறு பேசினார். நேற்று ஏழு வார்டுகளில் கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி