காட்டுப்பன்றி நடமாட்டம் அமைச்சர் ஆலோசனை
தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த ஊத்துப்பாளையம் பகுதியில், இரவு நேரங்-களில் காட்டுப்பன்றிகள் புகுந்து, மக்காச்சோள பயிர்களை நாசம் செய்வதாக, விவசாயிகளிடையே குற்றச்சாட்டு எழுந்தது. இந்நி-லையில் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், அமைச்சர் கயல்விழி தலைமையில், இதுகுறித்து நேற்று ஆலோ-சனை கூட்டம் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ், வருவாய் கோட்-டாட்சியர் பெலிக்ஸ் ராஜா முன்னிலை வகித்தனர். காட்டுப்பன்றி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டத்தை கட்டுப்படுத்து-வது குறித்து ஆலோசித்தனர். திருப்பூர் மாவட்ட வன அலுவலர் தேவேந்திர குமார் மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.