உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சுகாதாரத்துறைக்கான கருத்துகளை தெரிவியுங்கள் பேரவை துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர் யோசனை

சுகாதாரத்துறைக்கான கருத்துகளை தெரிவியுங்கள் பேரவை துவக்க நிகழ்ச்சியில் அமைச்சர் யோசனை

ஈரோடு ''சுகாதாரத்துறைக்கான கருத்துகளை தெரிவியுங்கள், பிரச்னைகளை தீர்க்கலாம்,'' என, அமைச்சர் முத்துசாமி பேசினார்.ஈரோட்டில், பொது சுகாதாரத்துறை சார்பில், மாவட்ட சுகாதார பேரவை கூட்டம் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி., பிரகாஷ், எம்.பி., அந்தியூர் செல்வராஜ், ஈரோடு கிழக்கு தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திரகுமார், மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.பேரவையை துவக்கி வைத்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழக்கமான சிகிச்சைகளுக்கு அப்பால், மக்களை தேடி மருத்துவம், நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடத்தப்படுகிறது. நலம் காக்கும் ஸ்டாலின் முகாம், ஈரோடு மாவட்டத்தில், 45 நடத்த திட்டமிட்டு இதுவரை நடந்த, ஆறு முகாம்களில், 9,453 பயனாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பேரவை துவங்கியதன் மூலம், டாக்டர்கள், பொது அமைப்புகள் அந்தந்த பகுதியில் உள்ள பிரச்னைகள், தேவைகளை தெரிவிக்கலாம். மாவட்ட அளவில் தீர்வு காண்பதை, உடன் சரி செய்யலாம். அரசிடம் தெரிவித்து, திட்டமாக செயல்படுத்த வேண்டியதை விரைவாக பெற முயலலாம். இதுபற்றி அவ்வப்போது பேரவை கூட்டங்கள் நடத்தி, தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட அளவில், மாநில அளவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தயங்காமல், மக்கள் தேவைகளுக்கான கருத்துகளை தெரிவிக்கலாம். இவ்வாறு பேசினார்.மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின், மாவட்ட சுகாதார அலுவலர் அருணா ஆகியோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை